LATEST NEWS
“ரூம் நம்பர் 13-ல் ஒளிந்திருக்கும் ஆபத்து.. ஹோட்டல் முதலாளிகள் மறைக்கும் ‘அந்த’ ஒரு ரகசியம்.. பின்னணியில் இருக்கும் உலகளாவிய மர்மம்”..!!
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் 12-ம் எண் அறைக்கு அடுத்ததாக 13-ம் எண் இல்லாமல் 14-ம் எண் இருப்பதையோ அல்லது 13-க்கு பதிலாக 12A, 14 அல்லது ‘M’ போன்ற குறியீடுகள் பயன்படுத்தப்படுவதையோ நாம் காண முடிகிறது. இதற்கு முக்கியக் காரணம், பல நூற்றாண்டுகளாக மக்களிடையே தொடரும் 13-ம் எண் மீதான ஒருவித பயமும் மூடநம்பிக்கையும்தான். விருந்தினர்கள் பலரும் துரதிர்ஷ்டம் மற்றும் கெட்ட சகுனம் எனக் கருதி 13-ம் எண் அறையில் தங்க மறுப்பதால், ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் நிதி நஷ்டத்தைத் தவிர்க்கவே இந்த மாற்று எண்களைப் பயன்படுத்துகின்றனர்.
அறிவியல் மற்றும் மருத்துவ மொழியில் 13 என்ற எண்ணின் மீதான இந்தப் பயத்தினை ‘ட்ரிஸ்கைடெகாஃபோபியா’ என்று அழைக்கின்றனர். நார்ஸ் புராணக் கதைகளின்படி, ஒரு விருந்துக்கு 13-வதாக வந்த விருந்தாளியால் பெரும் சோகம் நிகழ்ந்ததாக நம்பப்படுவதே இந்த மேற்கத்திய பயத்தின் பின்னணியாகக் கூறப்படுகிறது. இதேபோல் ஆசிய நாடுகளில் 4 மற்றும் 9 ஆகிய எண்கள் ராசியில்லாத எண்களாகக் கருதப்படுகின்றன. என்னதான் நவீனத் தொழில்நுட்பங்களும் அறிவியல் சிந்தனைகளும் வளர்ந்துவிட்ட போதிலும், பல நூற்றாண்டுகள் கடந்தும் மக்களிடையே இந்த எண்கள் குறித்த பயமும் பழமையான நம்பிக்கைகளும் தொடர்ந்து நீடித்துக்கொண்டேதான் இருக்கின்றன.
