“இனி அமைதி பேச்சுக்கே இடம் கிடையாது”.. திடீரென குண்டை தூக்கிப்போட்ட டிரம்ப்.. இனி அடுத்து என்ன நடக்கும்?.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி அமைதி பேச்சுக்கே இடம் கிடையாது”.. திடீரென குண்டை தூக்கிப்போட்ட டிரம்ப்.. இனி அடுத்து என்ன நடக்கும்?.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

Published

on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாட்டுடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், இனிமேல் ஈரான் நாட்டுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தத் தான் விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்த சூழலில், அதிபர் டிரம்பின் இந்த திடீர் அறிவிப்பு உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவின் காரணமாக, மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் கடுமையான போர் பதற்றம் வெடித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளதோடு, உலக நாடுகளின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in