LATEST NEWS
BREAKING:ஜூலை 15-க்குள் PF வட்டி வரவு வைப்பு…மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித் தொகை வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் தொழிலாளர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 34 கோடி தொழிலாளர்கள் பயனடைய உள்ளார்கள்.
நாடு முழுவதும் உள்ள சுமார் 34 கோடி தொழிலார்களின் PF கணக்குகளில், மொத்தம் ரூ.1.44 கோடி தொகை வட்டியாக வரவு வைக்கப்பட உள்ளது. இந்த முக்கிய அறிவிப்பு PF கணக்கு வைத்துள்ள லட்சக்கணக்கான ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிப்பதாக அமைந்துள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில்தான் இந்த PF வட்டித் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், இந்த முறை வழக்கத்தை விட ஒரு மாதம் முன்பாகவே வட்டித் தொகை வரவு வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
