LATEST NEWS
“எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துங்க.. முதல்வர் விஜய்யை நேருக்கு நேர் சாடிய உதயநிதி ஸ்டாலின்.. தமிழக அரசியலில் அனல் பறக்கும் மோதல்”…!!
காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தர முதலமைச்சர் விஜய் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்துகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாடு அரசு எங்களிடம் தண்ணீரே கேட்கவில்லை என கர்நாடக அமைச்சர் கூறுவது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், முந்தைய திமுக ஆட்சியில் ஜூன் 12-லேயே மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை அணை திறக்கப்படாதது ஏன் என்றும் தவெக அரசை நோக்கி அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி ஜூன் மாதத்திற்குரிய 9.91 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதத்திற்குரிய 32 டி.எம்.சி தண்ணீரைத் தராமல் கர்நாடகா மறுத்து வரும் நிலையில், தவெக அரசு இதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் காப்பதாக உதயநிதி சாடியுள்ளார். தவெக-வுடன் தற்போது திடீர் கூட்டணி அமைத்துள்ள கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநிலத்திடமிருந்து, தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிமையைக் கேட்டுப் பெற முதலமைச்சர் விஜய் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தங்களது பக்கம் இழுப்பதில் காட்டும் வேகத்தை விடுத்து, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கக் கர்நாடகாவிடமிருந்து தண்ணீரை வாங்குவதில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் கடுமையாக விமரிசித்துள்ளார்.
