CINEMA
சீக்ரெட்!..அக்கா நடிகை-தங்கை தயாரிப்பாளர்..! சுந்தர் சி – குஷ்பூ மகள்களின் மாஸ் சினிமா என்ட்ரி!
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சுந்தர் சி மற்றும் குஷ்பூவின் இளைய மகள் அனந்திகா சுந்தர், தனது எதிர்கால திருமண ஆசைகள் குறித்து சுவாரசியமான பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தனக்கு மிக இளம் வயதிலேயே, அதாவது 8 வயதிலேயே திருமணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தனது திருமண உடை, விழா நடக்கும் இடம் மற்றும் குழந்தைகளுக்கு வைக்க வேண்டிய பெயர்கள் வரை அனைத்தையுமே தனது சிறு வயதிலேயே குடும்பத்தினருடன் பகிர்ந்து திட்டமிட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தற்போதைய சூழலில் தனக்குத் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை மீது ஆர்வம் இருந்தாலும், தனது தற்போதைய முழுக் கவனமும் சினிமா பணிகளின் மீதுதான் உள்ளது என்பதை அவர் தெளிவாக உணர்த்தியுள்ளார்.
தங்களது பெற்றோரைப் போலவே அனந்திகா மற்றும் அவந்திகா ஆகிய இருவருமே சினிமா துறையில் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இளைய மகள் அனந்திகா, ‘அவ்னி சினிமேக்ஸ்’ என்ற தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘டபுள் அக்குபன்சி’ என்ற வித்யாசமான கதைகளத்தைக் கொண்ட திரைப்படத்தைத் தயாரித்து தயாரிப்பாளராக முத்திரை பதித்துள்ளார். மறுபுறம், அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த மூத்த மகள் அவந்திகா, நடிகர் தனுஷின் மருமகன் பவிஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘அட்டாக்கர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். இதன் மூலம் சுந்தர் சி – குஷ்பூ தம்பதியின் மகள்கள் இருவரும் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் தங்களது திறமையை நிரூபிக்கத் தயாராகி வருகின்றனர்.
