“சினிமால காட்டுறதெல்லாம் பொய்!”…வழக்கறிஞர்கள் மத்தியில் வலம் வந்த நிமிஷா.. இணையத்தை கலக்கும் ‘என்ன விலை’ படத்தின் சுவாரசிய பின்னணி..!! – cinefeeds
Connect with us

CINEMA

“சினிமால காட்டுறதெல்லாம் பொய்!”…வழக்கறிஞர்கள் மத்தியில் வலம் வந்த நிமிஷா.. இணையத்தை கலக்கும் ‘என்ன விலை’ படத்தின் சுவாரசிய பின்னணி..!!

Published

on

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகை நிமிஷா சஜயன், தற்போது சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கலாமயா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தில் கருணாஸ், ஒய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் நிமிஷா சஜயன் ஒரு வழக்கறிஞராக வலம் வரவுள்ளார்.

இந்த படத்தில் தனது வழக்கறிஞர் கதாபாத்திரத்தை மிகவும் தத்ரூபமாக வெளிப்படுத்துவதற்காக நிமிஷா பெரும் மெனக்கெடல்களைச் செய்துள்ளார். இதற்கு முன்பு அவர் வக்கீலாக நடித்திருந்தாலும், ‘என்ன விலை’ திரைப்படம் அவருக்கு ஒரு முற்றிலும் புதிய அனுபவமாகவே அமைந்துள்ளது. இயக்குநரின் அறிவுரையின்படி, உண்மையான நீதிமன்றங்களுக்கு நேரில் சென்று அங்கு வழக்கு விசாரணைகள் எவ்வாறு நடைபெறுகின்றன, வழக்கறிஞர்கள் எப்படி வாதிடுகிறார்கள் என்பதை அவர் உன்னிப்பாக கவனித்துள்ளார்.

Advertisement

திரைப்படங்களில் காட்டப்படும் நீதிமன்றக் காட்சிகளுக்கும் நிஜத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை இந்த கள அனுபவத்தின் மூலம் அவர் உணர்ந்துள்ளார். வழக்கறிஞர்களின் நிஜமான வாதங்கள் மற்றும் நீதிமன்றத்தின் இயல்பான சூழல் ஆகியவற்றைப் பார்த்த பிறகு, சினிமாவில் உள்ள மிகையான சித்தரிப்புகளைத் தவிர்த்து, தனது உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பை மிகவும் எதார்த்தமாக மாற்றிக்கொண்டதாக நிமிஷா சஜயன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in