LATEST NEWS
மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. திங்கள்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு அதிரடி அறிவிப்பு..!!
2026-27ஆம் கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில், திங்கட்கிழமைகளில் 3 அரசு பொது விடுமுறை நாள்கள் வருகின்றன. இதன்படி, செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 19ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஏப்ரல் 19ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி ஆகிய நாள்கள் திங்கட்கிழமைகளில் வருகின்றன. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என தொடர்ந்து 3 நாள்கள் வார இறுதி விடுமுறையை என்ஜாய் செய்யும் அரிய வாய்ப்பு மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இந்த கல்வியாண்டில் கிடைத்துள்ளது.
இதில் கூடுதல் சிறப்பம்சமாக, அக்டோபர் 19 திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை விடுமுறை வருவதோடு, அதற்கு மறுநாளான அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை விஜயதசமி அரசு விடுமுறை நாளாகும். இதனால் அந்த வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து 4 நாள்கள் மினி வெகேஷன் போல தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “மாணவர்களே இந்த விடுமுறை நாள்களை செம்மையாகத் திட்டமிட்டு என்ஜாய் பண்ணுங்க!” என்று சமூக வலைத்தளங்களில் இப்போதே வாழ்த்துகள் குவியத் தொடங்கிவிட்டன.
