“ஸ்டாலினுக்கு கோபம் வந்தா தவெக காலி!”.. கொளுத்திப் போட்ட கேடிஆர்.. பரபரக்கும் அரசியல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஸ்டாலினுக்கு கோபம் வந்தா தவெக காலி!”.. கொளுத்திப் போட்ட கேடிஆர்.. பரபரக்கும் அரசியல்..!!

Published

on

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் ஆயுட்காலம் குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பரபரப்பான கணிப்பு ஒன்றை முன்வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அதிருப்தியும் கோபமும் எப்போது வெளிப்படுகிறதோ, அதே நொடியில் தவெக அரசு கவிழ்ந்துவிடும்; ஆட்சி அதிகாரமும் முடிவுக்கு வரும்” என்று அவர் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக ஆட்சியை வீழ்த்த ஸ்டாலினுக்கு அந்த கோபம் வர வேண்டும் என்றும் அவர் தனது பேச்சில் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, தவெக தலைவர் விஜய் அதிமுகவை விமர்சித்துப் பேசியதற்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார். முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் விஜய், அரசியல் ரீதியாகவும் தார்மீக முறையிலும் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசியலில் தூர்ந்து போன சக்தி என்று அதிமுகவை விமர்சிப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழக அரசியலில் மதயானைக்கு நிகராகக் கருதப்படும் பலம் பொருந்திய திமுகவையே தங்களது அரசியல் வலிமையால் அடக்கி ஆண்ட பாரம்பரியம் கொண்டவர்கள் நாங்கள் என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட தங்களை நோக்கி விமர்சனங்களை வைப்பதற்கு முன்னால் தவெக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதிமுகவின் அரசியல் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் அவர் எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in