LATEST NEWS
தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!.. CM Cell வாசலில் திண்டிவனம் பெண் செய்த அதிரடி காரியம்.. அலறியடித்த போலீசார்..!!
தலைமைச்செயலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், தங்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு முக்கிய வடிகாலாக விளங்குகின்றன. இந்நிலையில் திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவர் திடீரென தற்கொலை முயற்சி ஒன்றில் ஈடுபட்டார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைவில் செயல்பட்டு, அப்பெண்ணை மீட்டு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுத்தனர். இச்சம்பவம் தலைமைச் செயலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே முதலமைச்சரின் தனிப் பிரிவில் இவர் தனது குறை குறித்துப் புகார் மனு அளித்தும், அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாகத் தனது புகாருக்குத் தீர்வு கிடைக்காமல் மன விரக்தியில் இருந்த சாமுண்டீஸ்வரி, மீண்டும் தலைமைச் செயலகம் வந்தபோது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
