LATEST NEWS
அடப்பாவிங்களா..! பிரிட்ஜுக்குள்ளேயும் வந்துட்டாரா..? பனி லிங்கத்தை பார்த்து பஜனை செய்யும் பெண்கள் .. வைரலாகும் வினோத வீடியோ..!!
ஆக்ராவில் குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே தானாக உருவான பனி வடிவம் ஒன்று, பார்ப்பதற்கு ‘சிவலிங்கம்’ போன்ற தோற்றத்தில் இருப்பதால் தற்போது அது பேசுபொருளாக மாறியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள், அந்த அதிசய வடிவத்தைக் காண்பதற்காக அங்கே குவியத் தொடங்கியுள்ளனர்.
https://twitter.com/CCBBharat/status/2077281847583940635/video/1
அதிசய லிங்கம் என்று நம்பப்படும் இந்த பனி வடிவத்திற்குப் பெண்கள் மற்றும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காட்டி, பூஜைகள் செய்து வருகின்றனர். மேலும், குளிர்சாதனப் பெட்டியின் அருகிலேயே அமர்ந்து பெண்கள் பக்திப் பாடல்களைப் பாடி, பஜனைகள் செய்து வழிபட்டு வரும் இந்த விசித்திர நிகழ்வு சமூக வலைதளங்களிலும் பரவி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
