சற்றுமுன் அதிரடி..! லஞ்சப்புகார் வீடியோ வைரல்.. தவெக நிர்வாகியின் பதவி பறிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சற்றுமுன் அதிரடி..! லஞ்சப்புகார் வீடியோ வைரல்.. தவெக நிர்வாகியின் பதவி பறிப்பு..!!

Published

on

ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி வீராசாமி [எ] வீரா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், தவெகவின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். சாலை அமைக்கும் பணிக்கான நிலுவைத் தொகையை விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரர் நவீன் என்பவரிடம் இவர் ஆன்லைன் மற்றும் நேரடிப் பணம் மூலமாக லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகவும், தவெகவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் சி.வி.தினகரன் (தீனா) அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார். லஞ்சமில்லாத மற்றும் ஊழலற்ற ஆட்சியை வழங்குவதே தனது முக்கிய நோக்கம் என தவெக தலைவர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது சொந்தக் கட்சி நிர்வாகியே லஞ்சப் புகாரில் சிக்கி உடனடியாக நீக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த பணத்தை தான் நண்பர் என்ற முறையில் கைமாற்றாக மட்டுமே வாங்கியதாக வீராசாமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in