“நான் மாரடைப்பால் செத்துரணும்னு பாக்குறாங்க.. ஆனா பாஜக அழியுற வரைக்கும் நான் உசுரோட தான் இருப்பேன்” கொந்தளித்த மம்தா பானர்ஜி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் மாரடைப்பால் செத்துரணும்னு பாக்குறாங்க.. ஆனா பாஜக அழியுற வரைக்கும் நான் உசுரோட தான் இருப்பேன்” கொந்தளித்த மம்தா பானர்ஜி..!!

Published

on

தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு தான் சாக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி விரும்புவதாக மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜாக அரசு தவறாகப் பயன்படுத்தி வருவதாக அவர் சாடியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாகவும், மம்தாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாகவும் விளங்கிய மதன் மித்ரா அதிருப்தி குழுவில் இணைந்த பரபரப்பான அரசியல் சூழலில் மம்தா பானர்ஜி இந்த அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைப்புகளின் அரசியல் அழுத்தங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், தனக்கு மாரடைப்பு வரவேண்டும் என்று அவர்கள் விரும்பினாலும், பாஜகவின் வீழ்ச்சியைக் காணும் வரை தான் உயிரோடு இருக்கப் போவதாகச் சூளுரைத்துள்ளார். மம்தாவின் இந்த ஆவேசமான பேச்சு மேற்கு வங்க அரசியலிலும், தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பாஜாக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in