தமிழகத்தில் அதிர்ச்சி..! 6-ம் வகுப்பு மாணவனை சுத்தியலால் அடித்த ஆசிரியர்… மருத்துவமனையில் அனுமதி,,,!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழகத்தில் அதிர்ச்சி..! 6-ம் வகுப்பு மாணவனை சுத்தியலால் அடித்த ஆசிரியர்… மருத்துவமனையில் அனுமதி,,,!!

Published

on

சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவனை, உடற்பயிற்சி ஆசிரியர் உலோக சுத்தியலால் அடித்துக் கொடுமைப்படுத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி வகுப்பின் போது மாணவன் சரியாகச் செயல்படவில்லை என்று கூறி, ஆசிரியர் நவீன் ஜூட் கோனே (45) என்பவர் அந்தச் சிறுவனை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு, கை எலும்பு முறிந்ததோடு கடுமையான இரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த மாணவனின் தாயார், உடனடியாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தாயாரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், உடற்பயிற்சி ஆசிரியர் நவீன் ஜூட் கோனேவை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக் கூடத்தில் மாணவனுக்கு நேர்ந்த இந்தத் துயரம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in