LATEST NEWS
“இனி பள்ளிகளில் ரீல்ஸ் போட்டால் அவ்வளவுதான்!”.. அமைச்சர்களுக்கு CM விஜய் விடுத்த ஸ்ட்ரிக்ட் வார்னிங்.. பரபரக்கும் செயலகம்..!!
தமிழகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பள்ளிகளில் ரீல்ஸ் எடுப்பது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தின் போது அதிகாரிகளை வெளியில் அனுப்பிவிட்டு, அமைச்சர்களுடன் மட்டும் அவர் இந்த முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளார். பள்ளிகளில் ரீல்ஸ் செய்வது போன்ற தேவையற்ற நடவடிக்கைகளில் இனி யாரும் ஈடுபடக் கூடாது என்று அவர் மிகத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
பள்ளிகளை முறையாகக் கவனிப்பதற்கென்று தனியாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இருக்கும்போது, மற்ற அமைச்சர்கள் தங்களது துறை சார்ந்த பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற சர்ச்சைகள் இனிமேல் எழக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
