LATEST NEWS
“திடீர் பல்டி.. வேலுமணிக்கு ஷாக்..! EPS-உடன் கைகோர்த்த பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்..!!”
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மோகன் பங்கேற்றுள்ளார். இவர் EPS-க்கு ஆதரவான நிலப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் தங்களுடன் இருந்தவர்களுக்கு உரிய பதவிகள் அல்லது பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் வேலுமணி, தங்கமணி மற்றும் கே.சி.வீரமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தி காரணமாக அவர்கள் இதுவரையில் EPS-ஐ நேரில் சந்திக்காமல் தவிர்த்து வந்துள்ளனர்.
அதிிருப்தியில் இருக்கும் வேலுமணி உள்ளிட்டோரின் அணியில் நேற்று வரை பண்ருட்டி MLA மோகன் இருந்து வந்துள்ளார். ஆனால், இன்று அவர் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, EPS நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பக்கம் சாய்ந்துள்ளார். இந்த அரசியல் நகர்வு தற்போது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
