“வெளியே போகக்கூடாது!” கணவன் போட்ட தடை… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட ஸ்கெட்ச்.. உடலை 3 துண்டுகளாக வெட்டி வீசிய கொடூரம்.. 11 மாதங்களுக்குப் பின் அம்பலமான ரகசியம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“வெளியே போகக்கூடாது!” கணவன் போட்ட தடை… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட ஸ்கெட்ச்.. உடலை 3 துண்டுகளாக வெட்டி வீசிய கொடூரம்.. 11 மாதங்களுக்குப் பின் அம்பலமான ரகசியம்..!!

Published

on

நவிமும்பை யாதவ் நகர் பகுதியைச் சேர்ந்த பலிராம் குஷ்வாஹாஎன்ற நபர், 40 வயதான அவரது மனைவி சுனிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராகுல் பிரஜாபதி என்ற 30 வயது வாலிபர் ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரான ராகுலுடன் சுனிதாவிற்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பு குறித்து கணவர் பலிராமிற்கு தெரியவந்ததால், அவர் தனது மனைவியைக் கடுமையாக அடித்து, வீட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளார். இதனால் தனது கள்ளக்காதலனைச் சந்திக்க முடியாமல் ஆத்திரமடைந்த சுனிதா, பலிராமைத் தீர்த்துக்கட்ட ராகுலுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த 2025 ஜூலை 9 அன்று பலிராமை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, அவரது உடலை மூன்று துண்டுகளாக வெட்டி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வீசியுள்ளனர்.

கொலைக்குத் திட்டம் தீட்டிய சுனிதா, தனது கணவர் வீட்டை விட்டு எங்கோ சென்றுவிட்டதாக அவரது சகோதரர்களிடம் பொய் கூறியுள்ளார். மேலும், கொலை நடந்த சில நாட்களிலேயே தனது சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, கள்ளக்காதலன் ராகுலுடன் சேர்ந்து ஒரே அறையில் வாழத் தொடங்கியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பலிராமின் சகோதரர், சுனிதாவைத் தேடிச் சென்றபோது அவர் ராகுலின் அறையில் இருந்ததைக் கண்டு காவல்துறையில் புகார் அளித்தார். இச்சம்பவம் நடந்து சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு, காவல்துறையினர் ராகுல் மற்றும் சுனிதாவைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த கொடூரக் கொலை விபரீதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in