CINEMA
அடப்பாவமே!… ரத்த வெள்ளத்தில் கணவர்… உயிருக்குப் போராடும் 8 வயது மகன்.. அசால்ட்டாக போன் நோண்டிய மனைவி.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
கர்நாடகாவின் தார்வாட் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த மயக்கவியல் நிபுணர் கிரண் ஹொன்னன்னவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். அவரது 8 வயது மகன் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டான். ஆனால், அதே வீட்டில் இருந்த கிரணின் மனைவி பிரியங்கா, எவ்வித பதற்றமும் இன்றி படுக்கையில் படுத்துக்கொண்டு செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, உறவினர்கள் போனில் கேட்டபோது, கிரண் தூங்குவதாகவும், வெளியே சென்றுள்ளதாகவும் பிரியங்கா முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்கு நேரில் சென்றபோதுதான் இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த மருத்துவர் கிரணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, உயிருக்குப் போராடிய 8 வயது சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகப் பிரியங்காவைக் கைது செய்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், தார்வாட் காவல்துறையினர் இந்தத் திடுக்கிடும் கொலைக்கான உண்மைப் பின்னணி குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
