LATEST NEWS
பெண்களுக்கு ஜாக்பாட் வேலைவாய்ப்பு..CM விஜய் கொண்டு வரும் ‘Women’s Quality Employment Plan’ – செம குஷியில் மகளிர்..!!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், ‘Women’s quality employment plan’ என்ற புதிய திட்டங்களை வகுக்க முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்த, தகுதியான ஆலோசனை நிறுவனங்களைத் தேர்வு செய்ய தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கான வேலைவாய்ப்புச் சந்தை அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பெண்கள் வேலைக்குச் செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பராமரிப்பில் உள்ள சவால்களைக் கண்டறியுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இச்சவால்களுக்குத் தகுந்த தீர்வுகளைக் கண்டறிந்து திட்டத்தை விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
