ஸ்டாலின் தலையில் இடி… அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த மீனா ஜெயக்குமார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்டாலின் தலையில் இடி… அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த மீனா ஜெயக்குமார்..!!

Published

on

கோவை மாவட்டத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பிரமுகராக அறியப்பட்ட மீனா ஜெயக்குமார், அண்மையில் அக்கட்சியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகத் தனது பொறுப்பில் இருந்து விலகினார். திமுகவில் இருந்து வெளியேறிய அவர், தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தவெக அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக ஐக்கியமாகியுள்ளார்.

தவெகவில் இணைந்த மீனா ஜெயக்குமாருக்கு அமைச்சர் என். ஆனந்த் கட்சித் துண்டு போர்த்தி, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் அட்டையை வழங்கி நெகிழ்ச்சியுடன் வரவேற்றார். கோவை மாவட்ட திமுகவில் செல்வாக்குமிக்க பெண் முகமாக இருந்த மீனா ஜெயக்குமார், தற்பொழுது தவெகவில் இணைந்துள்ளது கோவை மண்டல அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாகத் தவெகவின் உட்கட்சிப் பலத்திலும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in