CRIME
அய்யோ கொடுமையே..! சீட் தருவியா மாட்டியா… வயசானவங்கன்னு கூட பார்க்காம முதியவரை அடித்துக் கொன்ற தந்தை-மகன்..! மெட்ரோவில் நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்…!!
டெல்லியில் தனது தம்பியைப் பார்த்துவிட்டு தாய் துர்கா (65) என்பவருடன் மெட்ரோ இரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பவன் சர்மா (49) என்ற நபர், இருக்கைத் தகராறு காரணமாகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்டி ஹவுஸ் பகுதியில் இரயிலில் ஏறிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பிரதாப் சிங் மற்றும் அவரது மகன் சித்தார்த் சிங் ஆகியோர், முதியோர் இருக்கையில் அமர்ந்திருந்த பவன் சர்மா மற்றும் அவரது தாயாரை எழுமாறு மிரட்டியுள்ளனர்.
அவர்கள் கூறியபடியே பவன் சர்மா இருக்கையை விட்டு விலகிக் கொடுத்தபோதிலும், ஆத்திரமடைந்த சஞ்சய் பிரதாப் சிங்கும் அவரது மகனும் பவன் சர்மாவின் சட்டையைப் பிடித்துக் கன்னத்தில் அறைந்தும், நெஞ்சில் பலமாகக் குத்தியும் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மெட்ரோ நிலையத்தை அடையும் போது பவன் சர்மா மயங்கி விழுந்து, மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பவன் சர்மாவின் 49-வது பிறந்தநாளை வரும் நவம்பர் 2-ஆம் தேதி கொண்டாடக் குடும்பத்தினர் தயாராக இருந்த நிலையில், இச்சம்பவம் அவர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி காவல்துறையினர், குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை மற்றும் மகனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
