CRIME
“நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்..” ரத்தவெள்ளத்தில் சரிந்த 35 வயது நபர்.. மர்ம கும்பலின் வெறிச்செயல்.. திடுக்கிடும் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் பரபரப்பான திரியம்பக் நாகா பகுதியில், 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பட்டப்பகலில் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிகரத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த நபர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அவசர மருத்துவச் சிகிச்சைக்காக நாசிக்கு மாவட்ட அரசு சிவில் மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் வேளையில், அவரது உடல்நிலை தற்பொழுது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மும்பை நாகா காவல்துறையினர் உடனடியாகப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு, அப்பகுதியில் நிலவிய பதற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இத்தாக்குதல் குறித்து வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ள காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய வீதியில் அரங்கேறிய இந்த அமானுஷ்ய வன்முறைச் சம்பவம், நாசிக்கு நகரின் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவிலான அச்சத்தையும் கவலையையும் எழுப்பியுள்ளது.
