LATEST NEWS
BREAKING: மத்திய அமைச்சர் எல். முருகன் திடீர் ராஜினாமா… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. அதிரும் அரசியல் களம்..!!
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராகச் செயல்பட்டு வந்த அவர், தனது அமைச்சர் பதவியோடு சேர்த்து மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்வதாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐந்து பக்கங்கள் கொண்ட விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். எளிய கூலித்தொழிலாளியின் மகனாகப் பிறந்த தனக்கு, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பாரத மாதாவுக்கும் தமிழகத்திற்கும் சேவையாற்றக் கிடைத்த வாய்ப்பு தனது வாழ்வின் மிகப்பெரிய கௌரவம் என்று அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது இந்தத் திடீர் ராஜினாமா முடிவிற்கான காரணம் குறித்து விளக்கியுள்ள எல். முருகன், 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டுத் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை அடிமட்ட அளவில் இருந்து வலுப்படுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மீண்டும் முழுநேரக் களப்பணிக்குத் திரும்பி, கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்திக்கவும், கட்சித் தொண்டர்களுடன் இணைந்து தமிழகத்தில் பாஜகவின் அடித்தளத்தைப் பலப்படுத்தவும் தான் விரும்புவதாக அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். டெல்லியில் முக்கியப் பொறுப்பில் இருந்த எல். முருகன், தமிழக அரசியலில் முழு கவனம் செலுத்துவதற்காகத் தனது பதவிகளைத் துறந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
