LATEST NEWS
அடடே.. இப்படியும் மனுஷங்க இருக்காங்களா..? 15 வருட ஏக்கம்… பிறந்த குழந்தைக்கு 500 ரூபாய் நோட்டுகளால் துலாபாரம்.. அப்புறம் செஞ்ச காரியம் தான் மாஸ்.. நெஞ்சை நெகிழ வைக்கும் பின்னணி..!!
திருமணம் ஆகி 15 ஆண்டுகள் வரை குழந்தைகள் இன்றி பல மருத்துவர்களை அணுகி ஏங்கித் தவித்த தம்பதியினரின் இல்லத்தில், மகாலட்சுமியே பெண் குழந்தையாகப் அவதரித்த நெகிழ்ச்சியான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. பல வருட காத்திருப்புக்குப் பிறகு தங்களுக்குக் கிடைத்த இந்த வரப்பிரசாதத்தைக் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த அக்குடும்பத்தினர், அக்குழந்தையை வெறும் கைகளில் ஏந்துவதோடு நிறுத்தாமல், தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக 500 ரூபாய் நோட்டுகளால் குழந்தையைத் தராசில் வைத்துத் துலாபாரம் கொடுத்தனர்.
दंपत्ति को 15 साल से बच्चे नहीं हो रहे थे काफी डॉक्टर को दिखाया
लेकिन अब उनके घर में लक्ष्मी आई है..
ये घटना राजस्थान से है जो सबके मन को छू गई.
15 साल के बाद जब घर में बेटी हुई तो इतनी खुशी हुई कि उसको पैसों के बराबरी तौल दिया…
और वो भी 500 रूपये के नोटों से
और वो पैसे… pic.twitter.com/bV1GapD93K— Namita (@Namita62307261) July 30, 2026
அவ்வாறு குழந்தைக்கு ஈடான எடையில் தராசில் வைத்து அளக்கப்பட்ட அத்தனை பணத்தையும் அவர்கள் தங்களது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தாமல், அப்படியே ஏழை எளிய மக்களின் நலனுக்காகத் தானமாக வழங்கியது அனைவரின் நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது. சுயநலமிக்க இந்த உலகத்தில், தங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தைக் கொண்டாடும் அதே வேளையில் பிறர் நல்வாழ்விற்கும் உதவும் இந்தத் தம்பதியின் பெருந்தன்மை, “இன்னமும் மனிதநேயம் உயிரோடுதான் இருக்கிறது” என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.
