CINEMA
“எனக்கு அது வேண்டாம்” குழந்தை குறித்து பேசிய நடிகை ஷபானா…. என்ன சொன்னார் தெரியுமா…??

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஷபானா. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனது க்யூட்டான சிரிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானவர்.ஜீ தமிழில் ஆயிரம் எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஒளிபரப்பான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.
இந்த சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷபானா சீரியல் நடிகர் ஆர்யனை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையி தற்போது கலந்து கொண்ட விருது நிகழ்ச்சி ஒன்றில் ஆர்யன்-ஷபானா விடம் குழந்தை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஷபானா, எனக்கு குட்டி ஷபானா வேண்டாம். குட்டி ஆரியன் தான் வேண்டும். சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுவோம் என்று கூறியுள்ளார்.