LATEST NEWS
“இப்படி பார்த்தா பாவம் பசங்க என்ன ஆவாங்க”.. க்யூட்டான லுக்கில் சீரியல் நடிகை ஷபானாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஷபானா. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனது க்யூட்டான சிரிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானவர்.
ஜீ தமிழில் ஆயிரம் எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஒளிபரப்பான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.
இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஷபானா. மேலும் விஜே அக்னி மற்றும் பிரியாராமன் உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷபானா சீரியல் நடிகர் ஆர்யனை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் மீண்டும் சீரியலில் நடிப்பார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஷபானா தற்போது கியூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.