இயக்குனரான முதல் படத்திலேயே தேசிய விருது.. தாயின் பிறந்தநாளில் சாதித்த நடிகர் மாதவன்.. வைரலாகும் பதிவு..!! - Cinefeeds
Connect with us

CINEMA

இயக்குனரான முதல் படத்திலேயே தேசிய விருது.. தாயின் பிறந்தநாளில் சாதித்த நடிகர் மாதவன்.. வைரலாகும் பதிவு..!!

Published

on

69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை நடிகர் மாதவனின் ராக்கெட்டரி திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டது. மாதவன் இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் இதுதான். கடந்த வருடம் ஜூலை மாதம் திரைக்கு வந்த இந்த திரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இந்தத் திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்திருந்தார். இதில் மாதவனுடன் நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகிய நடிகர்களும் கேமியோ ரோலில் நடித்தனர். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்திய நடிகர் மாதவனுக்கு சமூக வலைத்தளங்களில் தற்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் மாதவன் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை ஒரு முறை கூட தேசிய விருது வாங்கியது கிடையாது. ஆனால் இயக்குனராக அறிமுகமான தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருது வென்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக நேற்று மாதவனின் தாய் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தன்னுடைய தாய் பிறந்தநாள் என்பது தேசிய விருது கிடைத்ததை மிகுந்த மகிழ்ச்சியுடன் மாதவன் பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.