“1000 பேருக்கு முன்னாடி…” KGF ராக்கி பாய் டயலாக்கிற்கு சொந்தக்காரர் சீமானா..? இணையத்தை உலுக்கும் வீடியோ… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“1000 பேருக்கு முன்னாடி…” KGF ராக்கி பாய் டயலாக்கிற்கு சொந்தக்காரர் சீமானா..? இணையத்தை உலுக்கும் வீடியோ… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!!

Published

on

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைகளில் பேசும் அதிரடி வசனங்கள் பலவும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது புகழ்பெற்ற ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் முக்கிய வசனம் குறித்து அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தில் இடம் பெற்ற “ஆயிரம் பேர் என் பின்னால் நிற்கிறார்கள் என்ற தைரியம் எனக்கு இல்லை, நான் ஆயிரம் பேருக்கு முன்னால் நிற்கிறேன் என்ற தைரியம் என் பின்னால் இருப்பவர்களுக்கு இருக்கிறது” என்ற உலகப் புகழ்பெற்ற மாஸ் வசனம், தான் மேடையில் பேசியதுதான் என்று சீமான் கூறியுள்ளார். தனது அந்த உரையாடலைக் கேட்டுத்தான், படத்துக்கான தமிழ் வசனத்தை எழுதிய தனது தம்பி அந்த வசனத்தை அமைத்தார் என அவர் குறிப்பிட்டிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

சீமானின் இந்த பேச்சைக் அடங்கிய வீடியோ எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வழக்கம்போல நெட்டிசன்கள் இதைக் கிண்டல் செய்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். “KGF மாஸ் வசனத்துக்கே சீமான்தான் வித்திட்டாரா?” என இணையவாசிகள் நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பி வருவதால், இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in