“6 மாதப் பிரிவுக்குப் பின் சேர்ந்த தம்பதி…மீண்டும் வெடித்த கடும் சண்டை..!” மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்று கணவன் செய்த பகீர் காரியம்.. விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“6 மாதப் பிரிவுக்குப் பின் சேர்ந்த தம்பதி…மீண்டும் வெடித்த கடும் சண்டை..!” மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்று கணவன் செய்த பகீர் காரியம்.. விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நாகல்கித்தா மண்டலத்தைச் சேர்ந்த இராக்கப்பள்ளி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த சையத் முல்தான் மற்றும் இர்பானா தம்பதியிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கடந்த 6 மாதங்களாக இர்பானா தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சமீபத்தில் கிராமப் பெரியவர்கள் முன்னின்று நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இர்பானா மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார். ஆனால், கணவன் வீட்டிற்கு வந்த ஒரே வாரத்தில் மீண்டும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சையத் முல்தான், கத்தியால் மனைவியைக் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை அருகில் உள்ள தர்கா அருகே வீசிவிட்டு, சையத் நேரடியாகக் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in