LATEST NEWS
இலவச ஆடு திட்டம்: யாருக்கெல்லாம் முன்னுரிமை..? உடனே விண்ணப்பிப்பது எப்படி..? அமைச்சர் வெளியிட்ட அதிரடித் தகவல்..!
பெண்களுக்கு 100% மானியத்தில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, 30,000 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க தீவிர நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பெண்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கென முதற்கட்டமாக கணிசமான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்களுக்கும், ஆதரவற்ற கைம்பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் யாருக்கு அதிக அளவிலான பொருளாதாரப் பயன்களும், வாழ்வாதார முன்னேற்றமும் கிடைக்குமோ, அவர்களைக் கண்டறிந்து ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் விளிம்புநிலை பெண்களின் சுயதொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த இலவச ஆடு வளர்ப்புத் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தகுதியான பெண்கள் எவ்வித சிரமமுமின்றி விண்ணப்பிக்கும் வகையில் இந்த நெறிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
