என் பொண்டாட்டிக்கு பிறந்தநாள்… “நீயே இந்த விடைத்தாள்களைத் திருத்தி முடித்துவிடு” பியூனுக்கு ரூ.5000 கொடுத்து விடைத்தாள் திருத்த சொன்ன பேராசிரியர் சஸ்பெண்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என் பொண்டாட்டிக்கு பிறந்தநாள்… “நீயே இந்த விடைத்தாள்களைத் திருத்தி முடித்துவிடு” பியூனுக்கு ரூ.5000 கொடுத்து விடைத்தாள் திருத்த சொன்ன பேராசிரியர் சஸ்பெண்ட்..!!

Published

on

பேராசிரியரின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், விடைத்தாள்களை திருத்தும் பணியை கல்லூரி அலுவலக உதவியாளரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் தனது மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட புறப்பட்டுச் சென்றார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷஹீத் பகத் சிங் அரசு முதுகலை பட்டப்படிப்பு பல்கலைக்கழகத்தில் நடந்த இச்சம்பவத்தில், மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை பேராசிரியர் முறையாகத் திருத்தியிருக்க வேண்டும். ஆனால், உடல்நலக்குறைவு என்று பொய் சாக்குப்போக்கு கூறிவிட்டு, அன்றைய தினமே மனைவியுடன் ரொமாண்டிக் டேட் சென்று பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

செல்லும் முன், “நீயே இந்த விடைத்தாள்களைத் திருத்தி முடித்துவிடு” என்று கூறி அலுவலக உதவியாளரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அதை ஏற்றுக்கொண்டு அந்த உதவியாளரும் அனைத்து விடைத்தாள்களையும் திருத்தி முடித்தார். இந்த வேலைக்காக அந்த உதவியாளருக்கு ₹5,000 பணமும், ஒரு புதிய சீருடையும் ஊதியமாகக் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Advertisement

https://twitter.com/MandeepRajBhar9/status/2088586584719515659/video/2

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் வகையில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையறிந்த கல்வித்துறை உடனடியாக தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின் முடிவில், கடமை தவறிய அந்தப் பேராசிரியர் உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspended) செய்யப்பட்டார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in