CRIME
அக்கா புருஷன்னு கூட பார்க்காம…” நடுரோட்டி பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொன்ற 3 பேர்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த எலக்ட்ரீசியன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
சென்னை செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரைச் சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன் (40) என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். எலக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வந்த இவருக்கும், இவரது மைத்துனர் சரவணனின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், பலமுறை எச்சரித்தும் அவர் தனது தொடர்பைக் கைவிடாததால் ரத்தினவேல் பாண்டியனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று காலை செங்குன்றம் அடுத்த எம்.எ.நகரில் பைக்கில் சென்றுகொண்டிருந்த ரத்தினவேல் பாண்டியனை, சரவணன் மற்றும் அவரது தம்பி தனசேகர், உறவினர் பழனிசாமி ஆகிய மூவரும் சேர்ந்து வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த செங்குன்றம் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தலைமறைவாக இருந்த 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
