LATEST NEWS
“70 வயசுக்கு மேல உள்ளவங்க வீட்டுக்கு கிளம்புங்க” திமுகவில் அதிரடி உச்சவரம்பு… பதவி இழக்கும் 13 மூத்த செயலாளர்கள் யார் யார்.? வெளியானது லிஸ்ட்..!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில், இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கட்சியின் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என மாவட்டங்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், மாவட்டச் செயலாளர் பதவிக்கு 70 வயது உச்சவரம்பும், அதிகபட்சமாக 2 முதல் 3 முறை மட்டுமே போட்டியிடும் வரம்பும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த 70 வயது வரம்பு காரணமாக, நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றி வரும் முக்கிய மூத்த நிர்வாகிகள் 13 பேர் தங்களின் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதில் எ.வ.வேலு (திருவண்ணாமலை தெற்கு – 75), கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (77), ஆர். காந்தி (ராணிப்பேட்டை – 80), சு. முத்துசாமி (ஈரோடு தெற்கு – 77), மற்றும் இரா. ஆவுடையப்பன் (திருநெல்வேலி மேற்கு – 81) ஆகிய மூத்த தலைவர்கள் அடங்குவர். மேலும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (தூத்துக்குடி தெற்கு – 74), ரகுபதி (புதுக்கோட்டை தெற்கு – 76), செஞ்சி மஸ்தான் (விழுப்புரம் வடக்கு – 71), க. சுந்தர் (காஞ்சிபுரம் தெற்கு – 72) மற்றும் நா. இராமகிருஷ்ணன் (தேனி தெற்கு – 77) ஆகியோரும் வயது வரம்பு விதியால் பதவி இழக்கவுள்ளனர். இவர்களுடன் எஸ்.ஆர். சிவலிங்கம் (சேலம் கிழக்கு – 75), சாக்கோட்டை க. அன்பழகன் (தஞ்சாவூர் வடக்கு – 72) மற்றும் கோ. தளபதி (மதுரை மாநகர் – 70) ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இப் பதவிகளுக்குப் பதிலாக, கிளைச் செயலாளர் முதல் மாநகர நிர்வாகிகள் வரை இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
