LATEST NEWS
காலையிலேயே பயங்கர ஷாக்..! த.வெ.கவில் உட்கட்சி மோதல்.. பெண்கள் உட்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்கு உட்பட்ட மருத்துவக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக ஆலோசனைக் கூட்டத்தில், உட்கட்சி மோதல் வெடித்துக் கைகலப்பாக மாறியதில் 4 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றியச் செயலாளர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் آدனூர், மருத்துவக்குடி மற்றும் நாககுடி பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது கிளைச் செயலாளர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது விஜய் மக்கள் இயக்கத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் க.விஜய் மற்றும் சமீபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து த.வெ.க-வில் இணைந்த விஜயகாந்த் ஆகிய இருவருமே அப்பதவிக்கு உரிமை கோரியுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் கோஷ்டி மோதலாக மாறியது.
இந்தக் கைகலப்பில் மு.ஷேசாத்திரி, அவரது தாயார் இந்திராணி, ரா.சிவா, ச.மாலதி, ச.விஜயா மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
