“மேடத்தை மாசம் ஒருமுறை கவனியுங்க..!” தென்மாவட்ட தவெக பெண் எம்.எல்.ஏ கணவரின் மாமூல் அராஜகம்.. ஆடியோ ஆதாரத்துடன் கோட்டைக்குச் சென்ற புகார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மேடத்தை மாசம் ஒருமுறை கவனியுங்க..!” தென்மாவட்ட தவெக பெண் எம்.எல்.ஏ கணவரின் மாமூல் அராஜகம்.. ஆடியோ ஆதாரத்துடன் கோட்டைக்குச் சென்ற புகார்..!!

Published

on

தென்மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் எம்.எல்.ஏ-வின் கணவர், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் மாதாந்திர “மாமூல்” கேட்டு மிரட்டி வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. “மேடத்தை மாசம் ஒருமுறை கவனிக்க வேண்டும்” எனக் கூறி, உள்ளூர் திட்டங்களுக்கு லஞ்சம் கேட்டு, உடன்படாத அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக அவர் மிரட்டுவதாகவும், இதனால் அதிகாரிகள் மற்றும் தவெகவினர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இந்தச் செயல்களால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என தவெக தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த வசூல் வேட்டை தொடர்பாக ஆடியோ ஆதாரங்களுடன் தவெக தலைமையிடம் ரகசியப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ கணவர் மீது தவெக மேலிடம் அதிரடி நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in