வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 9 வங்கிகள் .. 26 ஊழியர்கள் நிலை என்ன..? நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்.. பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 9 வங்கிகள் .. 26 ஊழியர்கள் நிலை என்ன..? நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்.. பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

நெபாளத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அந்நாடு முழுவதும் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தால் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி 9 வங்கி கட்டிடங்கள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அங்கு பணிபுரிந்த 26 ஊழியர்களின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்கள் மாயமாகியுள்ளனர்.

இந்த பயங்கர வெள்ளத்தால் நாட்டின் உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 42 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப் பகுதியும் பல முக்கிய பாலங்களும் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400-க்கும் மேற்பட்ட இந்தியப் யாத்ரீகர்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.

Advertisement

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இக்கட்டான இந்த சூழ்நிலையில் அண்டை நாடான நேபாளத்திற்கு உதவும் வகையில், இந்தியா 10 டன் எடையுள்ள அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை அவசரக்கால உதவியாக அனுப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in