அடடே… இத்தனை நாளா இது தெரியாம போச்சே…! பிளாஸ்டிக் நாற்காலி நடுவுல ஏன் ஓட்டை இருக்கு தெரியுமா..? உண்மையான காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே… இத்தனை நாளா இது தெரியாம போச்சே…! பிளாஸ்டிக் நாற்காலி நடுவுல ஏன் ஓட்டை இருக்கு தெரியுமா..? உண்மையான காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

Published

on

பொதுவாகவே பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் சிறிய துளை இருப்பதை அனைவரும் அவதானித்திருப்போம். இதன் பின்னணியில் இருக்கும் காரணம் குறித்து பலருக்கும் தெரியாது. குறிப்பிக பிளாஸ்டிக் நாற்காலிகளின் மையப்பகுதியில் இருக்கும் சிறிய வட்டத் துளை ஏன் உள்ளது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அதற்குப் பின்னால் பல பயனுள்ள காரணங்கள் உள்ளன. இது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

முக்கிய காரணங்கள்: நாற்காலிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கும்போது அவற்றுக்கு இடையில் காற்று சிக்கி, பிரிப்பது கடினமாகலாம். இந்தத் துளை காற்று வெளியேற வழிவகுத்து, நாற்காலிகளை எளிதாகப் பிரிக்க உதவுகிறது. சரியான வடிவமைப்பில் அமைக்கப்படும் இந்தத் திறப்பு, நாற்காலியின் எடையைச் சீராகப் பகிர்ந்து, தேவையான உறுதித்தன்மையைப் பராமரிக்க உதவக்கூடும்.பிளாஸ்டிக் நாற்காலிகள் பொதுவாக ஊசி வார்ப்பு முறையில் தயாரிக்கப்படுகின்றன; துளைகள் மற்றும் மாறுபட்ட தடிமன் கொண்ட பகுதிகள், பிளாஸ்டிக் சீராகக் குளிர்வதற்கும் சுருக்கம், வளைதல் போன்ற உற்பத்திக் குறைபாடுகளைத் தவிர்க்கவும் உதவுகின்றன.

Advertisement

மழை, சுத்தம் செய்தல் அல்லது பிற காரணங்களால் இருக்கையில் தேங்கும் நீர் இந்தத் துளை வழியாக வெளியேறி, நாற்காலியை விரைவாக உலரச் செய்கிறது. தேவையற்ற பகுதிகளில் பிளாஸ்டிக்கின் அளவைக் குறைப்பதன் மூலம், நாற்காலியின் வலிமையைப் பாதிக்காமல் மூலப்பொருள் மற்றும் உற்பத்திச் செலவைக் குறைக்க முடிகிறது. எனவே, நாற்காலியில் காணப்படும் அந்தச் சிறிய துளை வெறும் அலங்காரத்திற்காக அல்ல; மாறாக வடிவமைப்பு, உற்பத்தி, பயன்பாடு மற்றும் செலவுக் குறைப்பு எனப் பல விடயங்களுக்கு உதவியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in