LATEST NEWS
அடச்சீ.. ஆசிரியரா இவர்..? மாணவன் செய்த அந்த ஒரே ஒரு சின்ன தப்பு… ஆத்திரத்தில் ஆசிரியரின் கொடூர வெறிச்செயல் .. நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஹஸ்தினாபூர் பகுதியில், பள்ளி ஆசிரியர் ஒருவர் 28 வினாடிகளில் ஒரு மாணவனை 17 முறை பளார் பளாரெனக் கன்னத்தில் அறைந்த கொடூரச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் சக மாணவனுடன் அந்த மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுதான் அவன் செய்த ஒரே தவறாகும். இதைக் கண்டு கடும் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர், தனது நிதானத்தை இழந்து அந்தச் சிறுவனை நோக்கி அடுக்கடுக்கான அடிகளைப் பொழிந்து தனது அநாகரிக அராஜகத்தை அரங்கேற்றியுள்ளார்.
https://twitter.com/RajuSharmajour1/status/2093193487982399784/video/1
இந்தக் கொடூரத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை, தற்போது உள்ளூர் காவல் நிலையத்தில் அந்த ஆசிரியருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஆசிரியரே இத்தகைய வன்முறையில் ஈடுபட்டதைக் கண்டித்து, அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டக் குழுவினரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையும் உரைய வைத்துள்ளது.
