LATEST NEWS
நெஞ்சை உறைய வைக்கும் நிமிடங்கள்.. ஸ்கூட்டரை நிறுத்திட்டு சாவியை எடுக்க மறந்த வாலிபர்!” பின்னால் இருந்த சிறுமி செய்த காரியத்தால் அரங்கேறிய பயங்கரம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
பள்ளியிலிருந்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்த வாலிபர் ஒருவர், வீட்டின் வாசல் கேட் அருகே ஸ்கூட்டரை நிறுத்திய போது சாவியை எடுக்க மறந்ததால் ஏற்பட்ட விபத்தின் பதைபதைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வாலிபர் வாகனத்தை நிறுத்திவிட்டு கேட்டைத் திறப்பதற்காக முன்னோக்கி நகர்ந்த அதே நொடியில், ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த சிறுமி தற்செயலாக அதன் ஆக்ஸிலரேட்டரை வேகமாகத் முறுக்கியுள்ளார். இதனால் அந்த ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகத்தில் முன்னோக்கிப் பாய்ந்து சில தூரம் சென்ற பின் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
https://twitter.com/HajiNizamuddin3/status/2093048252551790966/video/1
இந்தக் கொடூரமான விபத்தில் நல்வாய்ப்பாக அந்தச் சிறுமிக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. வாகனங்களில் குழந்தைகளை அமர வைத்து அழைத்துச் செல்லும்போது நாம் காட்டும் மிகச் சிறிய அலட்சியம் கூட, எவ்வளவு பெரிய விபரீதமான விபத்தாக மாறக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவமே மிகச்சிறந்த உதாரணமாகும். எனவே, குழந்தைகளுடன் பயணிக்கும் போது வாகனத்தை நிறுத்திய உடனே இன்ஜினை அணைத்துச் சாவியை எடுப்பதில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
