LATEST NEWS
“நீங்க ஜி-ஸ்கொயர் பற்றி பேசினா நாங்க த்ரிஷா பற்றி பேசுவோம்..!” திமுக பிரமுகரின் சர்ச்சை பதிவால் வெடித்த புதுப்போர்.. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!
திமுக மாணவரணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தனது சமூக ஊடகப் பக்கத்தில், பிரபல நடிகை த்ரிஷாவைக் குறிப்பிட்டுப் பதிவிட்ட கருத்து தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அரசு ரத்து செய்த விவகாரத்தில், தவெகவினர் தொடர்ச்சியாக ‘ஜி-ஸ்கொயர்’ நிறுவனத்தை இதனுடன் இணைத்துச் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்ட வீரமணி ஜெயக்குமார், “ஜி-ஸ்கொயர் பற்றி பேசினா த்ரிஷா பற்றி பேசுவோம்” என நடிகை த்ரிஷாவின் பெயரை இந்த விவகாரத்திற்குள் தேவையின்றி இழுத்துப் பதிவிட்டுள்ளார்.
அரசியல் ரீதியான விவாதத்திற்குள் சம்பந்தமே இல்லாத ஒரு பெண் கலைஞரைக் கொண்டு வந்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய வீரமணி ஜெயக்குமாரின் இந்தச் செயல்பாட்டிற்கு, திமுக மகளிரணியினரே தங்களது கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். “அரசியல் கருத்து மோதல்களுக்குள் த்ரிஷாவை எதற்காக இழுக்கிறீர்கள்?” என்று திமுகவைச் சேர்ந்த பெண் நிர்வாகிகளே சொந்தக் கட்சிக்கு எதிராகக் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இந்த உள்நாட்டு விவாதமும், வீரமணி ஜெயக்குமாரின் சர்ச்சை பதிவும் தற்பொழுது அரசியல் வட்டாரத்திலும், சினிமா உலகிலும், சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
