பகீர்… முன்னாள் துணை முதல்வர் வீட்டு வாசலில் பயங்கரம்…! திடீரென பிளந்த நடுரோடு… 10 அடி ஆழப் பள்ளத்தில் பைக்குடன் விழுந்த ஓட்டுநர்..! லக்னோ உள்கட்டமைப்பின் தோலை உரித்த கனமழை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்… முன்னாள் துணை முதல்வர் வீட்டு வாசலில் பயங்கரம்…! திடீரென பிளந்த நடுரோடு… 10 அடி ஆழப் பள்ளத்தில் பைக்குடன் விழுந்த ஓட்டுநர்..! லக்னோ உள்கட்டமைப்பின் தோலை உரித்த கனமழை..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையைத் தொடர்ந்து, நகரின் மோசமான சாலை நிலைமை வெளிப்பட்டது. மதியம் முதல் மாலை வரை சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாகப் பெய்த கனமழையால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து நீர் தேங்கியதுடன், மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் உள்நோக்கிச் சரிந்து பெரிய பள்ளங்கள் உருவாயின. குறிப்பாக, ஐ.டி. சந்திப்புக்கு அருகிலுள்ள பரபரப்பான பிரதான சாலையில், முன்னாள் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மாவின் இல்லத்திலிருந்து சில அடிகள் தொலைவில் சுமார் 7 முதல் 10 அடி ஆழமுள்ள மிகப்பெரிய குழி திடீரென உருவானது.

சாலையின் நடுவில் உருவான இந்த ஆபத்தான குழியைக் கவனிக்கத் தவறிய இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், நேராக அதற்குள் விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அங்கே கூடிய உள்ளூர்வாசிகள் விரைந்து செயல்பட்டு, காயமடைந்த அவரைப் பள்ளத்திலிருந்து வெளியே இழுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மேல் கொண்டு வேறு வாகனங்களோ அல்லது பாதசாரிகளோ அதில் விழுவதைத் தடுக்க அப்பகுதியைத் தடுப்புக்கட்டைகளால் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெருமளவில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Advertisement

முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இத்தகைய ஆபத்தான முறையில் சாலை உள்சரிந்தது, நகரின் வடிகால் அமைப்பு மற்றும் சாலைகளின் தரம் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சரியான நேரத்தில் அந்தப் பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும், விபத்துக்குப் பின்னரே நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நகராட்சியும் நிர்வாகமும் உடனடியாக அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு நடத்தி, மழையால் ஏற்பட்ட பள்ளங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in