“இது தடையா… இல்ல பக்தர்களுக்கு தண்டனையா..?” கோயில்களில் செல்போன் தடையால் 20% குறைந்த கூட்டம்..! பின்னணியில் வெளியான ஷாக் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது தடையா… இல்ல பக்தர்களுக்கு தண்டனையா..?” கோயில்களில் செல்போன் தடையால் 20% குறைந்த கூட்டம்..! பின்னணியில் வெளியான ஷாக் தகவல்..!!

Published

on

தமிழகத்தின் பிரதான கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை அமல்படுத்தப்பட்ட பிறகு, அங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வருகை 20% வரை சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்போன்களைக் பாதுகாப்பாக ஒப்படைத்து டோக்கன் வாங்குவதற்காக நீண்ட நேர வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பது பக்தர்களிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், செல்போன்களை வைப்பதற்கு டோக்கன் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுவதும், அதற்காகக் கூடுதல் நேரம் விரயமாவதும் பக்தர்கள் வருகைக் குறைவுக்கு முக்கியக் காரணங்களாகக் சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளாலும் அலக்கழிப்புகளாலும் சிரமத்திற்கு ஆளாவதாகப் பல்வேறு கோயில்களுக்கு வரும் பல பக்தர்களும் இதே கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in