பிரிஞ்சிட்டதா சொன்னதெல்லாம் பொய்யா?… கோவாவில் ஒன்றாக தம்மடிக்கும் ரவி மோகன் – கெனிஷா.. கோலிவுட்டை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ..! – cinefeeds
Connect with us

CINEMA

பிரிஞ்சிட்டதா சொன்னதெல்லாம் பொய்யா?… கோவாவில் ஒன்றாக தம்மடிக்கும் ரவி மோகன் – கெனிஷா.. கோலிவுட்டை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ..!

Published

on

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இருவரும் கோவாவில் ஒன்றாக அமர்ந்து ஒரே சிகரெட்டை மாறி மாறி புகைக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே ரவி மோகனை விட்டுத் தான் பிரிந்துவிட்டதாகவும், சென்னையை விட்டே வெளியேறிவிட்டதாகவும் கெனிஷா சமூக வலைத்தளங்களில் உருக்கமாக அறிவித்திருந்தார். இத்தகையச் சூழலில், அவர்கள் இருவரும் பிரிந்ததாகக் கூறப்பட்ட தகவல்களைப் பொய்யாக்கும் விதமாக, கோவாவில் அவர்கள் ஒன்றாகச் சுற்றுலா சென்று உல்லாசமாக இருக்கும் இந்த புதிய வீடியோ காட்சிகள் கோலிவுட் வட்டாரத்தில் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி விவாதப் பொருளாக மாறியுள்ளது.

https://www.facebook.com/share/v/18RwVLqfWu/

இவர்களின் இந்த நெருக்கம் குறித்து முன்னதாகவே ரவி மோகனின் மனைவி ஆர்த்தியின் தாயார், “அவர்கள் இருவரும் பிரியவில்லை” என்று குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படும் தகவல்கள் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. மேலும், ரவி மோகன் புதிதாக இயக்கவுள்ள ஒரு திரைப்படத்திற்கு கெனிஷாவே இசையமைக்க உள்ளார் என்ற கூடுதல் தகவல்களும் தற்போது கசிந்துள்ளன. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இதே வேளையில், இந்தத் தம்மடிக்கும் வீடியோ வெளியாகி இருப்பது இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சர்ச்சைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in