LATEST NEWS
திக் திக் திக்… நேரலையில் பேசத் தயாரான நிருபர்… அடுத்த நொடியே வெடித்துச் சிதறிய குண்டு… லெபனானில் நடந்த நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
தென் லெபனானில் உள்ள நபதியா பகுதிக்கு அருகே ‘அல்-மனார்’ தொலைக்காட்சி குழுவினர் நேரலை அறிக்கைக்காகத் தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் இரு செய்தியாளர்கள் காயமடைந்த நிலையில், அந்த அதிர்ச்சி தரும் தருணம் கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வெளியாகியுள்ள வீடியோவில், ஹெஸ்பொல்லா அமைப்புடன் தொடர்புடைய அல்-மனார் தொலைக்காட்சியின் நிருபர் அலி ஷபீப் கேமரா முன் பேசத் தயாராகும் காட்சி இடம்பெற்றுள்ளது. அப்போது திடீரென பயங்கர வெடிப்பு ஏற்பட்டு, நெருப்புப் பிழம்புகள் கேமரா பிரேமை ஆக்கிரமிக்கின்றன. அடுத்த நொடியே பதிவு திடீரெனத் துண்டிக்கப்பட்டு காட்சி நிறைவடைகிறது.
இந்தத் தாக்குதலில் நிருபர் அலி ஷபீப் மற்றும் கேமராமேன் முகமது பர்ஜாவீ ஆகிய இருவரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக இஸ்ரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தென் லெபனான் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
