பானையில் சிறுநீர் கழிக்க வைத்து… தொழுநோயாளிகளோடு என்னை சிறையில் அடைத்தார்கள்… மிசா கொடுமைகள் குறித்து ஸ்டாலின் உருக்கம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பானையில் சிறுநீர் கழிக்க வைத்து… தொழுநோயாளிகளோடு என்னை சிறையில் அடைத்தார்கள்… மிசா கொடுமைகள் குறித்து ஸ்டாலின் உருக்கம்…!!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எமர்ஜென்சி காலத்தில் தான் எதிர்கொண்ட கொடூரமான ‘மிசா’ சிறைக்கொடுமைகள் குறித்துப் பகிர்ந்துள்து தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவசரநிலை அறிவிக்கப்பட்ட அந்தப் பயங்கரமான காலகட்டத்தில், தங்களைச் சிறையில் அடைத்தபோது காவல்துறை மற்றும் சிறை நிர்வாகம் நிகழ்த்திய மனிதநேயமற்ற அத்துமீறல்களை அவர் இதில் விரிவாக விவரித்துள்ளார்.

அவர் சிறைக்குச் சென்றபோது அங்கு அடைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளுக்கும் கடுமையான சித்திரவதைகளும் கொடுமைகளும் அரங்கேறியதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தங்களைக் கைது செய்து கொண்டு சென்ற அதிகாரிகள், திட்டமிட்டே தொழுநோயாளிகள் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையில்தான் தங்கவைத்தனர் என்றும், 10 பேரை மிகச்சிறிய அறையில் அடைத்து வைத்து அடுக்கடுக்கான அவதிகளைக் கொடுத்ததாகவும் அவர் தனது பதிவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

அந்தச் சிறிய அறையிலேயே ஒரு சிறிய பானையை வைத்து, அதில் தான் அத்தனை பேரையும் சிறுநீர் கழிக்க வைத்த கொடுமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மிகவும் துர்நாற்றம் வீசிய அந்த இழிவான இடத்தில் தங்களை அடைத்து வைத்தது மட்டுமின்றி, இரவில் தங்களை நிம்மதியாகத் தூங்கவிடாமல் காவலர்கள் தங்களது பூட்ஸ் கால்களால் மிதித்துத் துன்புறுத்திய கொடூரமான நரக வேதனையையும் மு.க.ஸ்டாலின் அந்தச் செய்தியில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in