“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… அமைச்சர்களை பத்தி கேட்காதீங்க…!” செய்தியாளர்களிடம் கதறிய துரைமுருகன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உங்களை கையெடுத்து கும்பிடுறேன்… அமைச்சர்களை பத்தி கேட்காதீங்க…!” செய்தியாளர்களிடம் கதறிய துரைமுருகன்..!!

Published

on

வாரத்தில் 7 நாட்கள் இருக்கிறது என்பது கூடத் தெரியாதவர்கள் எல்லாம் இன்றைக்கு அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறேன், இந்த அமைச்சர்களைப் பற்றி என்கிட்ட தயவுசெய்து எதையும் கேட்காதீர்கள். சட்டப்பேரவையே ஒரு ஷூட்டிங் ஸ்பாட் போலத் தான் இருக்கிறது” என்று மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஷா கமிஷன் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த துரைமுருகன், குற்றச்சாட்டு சுமத்தும் அமைச்சர்களை முதலில் நாட்டின் வரலாற்றைச் சரியாகப் படித்துவிட்டு வருமாறு அறிவுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in