“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்..!” முதலமைச்சர் விஜய்க்கு ஆ.ராசா விடுத்த மாஸ் எச்சரிக்கை.. அதிரும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்..!” முதலமைச்சர் விஜய்க்கு ஆ.ராசா விடுத்த மாஸ் எச்சரிக்கை.. அதிரும் அரசியல் களம்..!!

Published

on

சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிசா (MISA) தியாகத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு எதிராகச் சென்னை சைதாப்பேட்டை திமுக கண்டனக் கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசிய பேச்சு பெரும் அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் சூழலில், நேற்று சைதாப்பேட்டை மேடையில் ஆ.ராசா பேசிய கருத்துக்கள் எல்லை மீறியதாகக் கூறி தவெக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில், தனது சர்ச்சை பேச்சு குறித்து சமூக வலைத்தளத்தில் புதிய விளக்கம் அளித்துள்ள ஆ.ராசா, தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் அடையாளத்தைத் திட்டமிட்டு கொச்சைப்படுத்தியதால் ஏற்பட்ட வலியை உணர்த்தவே தான் உணர்ச்சி உந்துதலில் அவ்வாறு பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனது வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை. ஆனால், நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என்று முதலமைச்சர் விஜய்யின் பெயரைத் குறிப்பிடாமல் அவர் மிகக் காரசாரமாக எச்சரித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in