“ஜாமீன் வேணும்னா ரூ.50 ஆயிரம் குடு…” இடைத்தரகர் மூலம் லஞ்ச வேட்டை ஆடிய போலீஸ் ஏட்டு… வழக்கறிஞர் போட்ட ‘ஸ்கெட்ச்’சால் அதிரடி சஸ்பெண்ட்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஜாமீன் வேணும்னா ரூ.50 ஆயிரம் குடு…” இடைத்தரகர் மூலம் லஞ்ச வேட்டை ஆடிய போலீஸ் ஏட்டு… வழக்கறிஞர் போட்ட ‘ஸ்கெட்ச்’சால் அதிரடி சஸ்பெண்ட்..!!

Published

on

மயிலாடுதுறை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கடை உரிமையாளரை ஜாமீனில் விடுவிக்க இடைத்தரகர் மூலம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொறையாறு போலீஸ் ஏட்டு அன்பரசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

புகையிலை பொருட்கள் பறிமுதல் குறித்து கடை உரிமையாளர், வக்கீல் சங்கமித்திரனிடம் தெரிவித்தபோது லஞ்சம் கைமாறியது தெரியவந்தது. இதுகுறித்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மற்றும் எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, எஸ்.பி. சினேகாபிரியா, ஏட்டு அன்பரசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in