உச்சகட்ட அவலம்.. 27 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அள்ளிய சைக்கோ கணவன்.. போனை பார்த்து உறைந்துபோன மனைவி.. பெரும் பரபரப்பு சமம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சகட்ட அவலம்.. 27 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அள்ளிய சைக்கோ கணவன்.. போனை பார்த்து உறைந்துபோன மனைவி.. பெரும் பரபரப்பு சமம்பவம்..!!

Published

on

மயிலாடுதுறை அருகே, தனது மொபைல் போனில் 27 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை மறைத்து வைத்திருந்த கணவர் மீது அவரது மனைவியே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காரைக்காலைச் சேர்ந்த 26 வயது பெண்ணிற்கும், சீர்காழியைச் சேர்ந்த அருண் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது. குடும்பக் கூட்டுப் பிரார்த்தனை ஒன்றின் போது, கணவரின் மொபைல் போனை அவரது மனைவி தற்செயலாகப் பார்த்துள்ளார். அதில் தனது வீடியோக்கள் மட்டுமின்றி, பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவருக்கு எதிராக தைரியமாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் அருணைக் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருமணமான சில மாதங்களிலேயே கணவனின் விபரீத புத்தி வெளிப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in