LATEST NEWS
“இதெல்லாம் ஒரு ஆசிரியருக்கு அழகா..?” மாணவனை முழங்காலில் நிற்க வைத்து ஆசிரியர் செய்த ‘அந்த’ காரியம்.. இணையத்தை உலுக்கிய வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தின் சைஃபை வட்டாரத்தில் உள்ள பிரெளலி தொடக்கப் பள்ளியில், உதவி ஆசிரியர் தினேஷ் மாத்தூர் மாணவர் ஒருவரின் மொட்டைத் தலையில் தபலா வாசித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த ஆசிரியர், தனது கால்களுக்கு இடையில் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டிருந்த மாணவனின் தலையில் சிரித்துக் கொண்டே விரல்களால் தபலா வாசித்துள்ளார். இந்த காணொளி பார்ப்பதற்கு வேடிக்கையாகத் தோன்றினாலும், மற்ற மாணவர்களுக்கு மத்தியில் அந்தச் சிறுவன் இதனால் பெரும் அவமானத்தை உணர்ந்திருப்பான் என்றும், இது குழந்தைகளிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் என்றும் இணையவாசிகள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கல்வித் துறைக்கு அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தன. இதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த அடிப்படை கல்வி அதிகாரி டாக்டர் ராஜேஷ் குமார், உதவி ஆசிரியர் தினேஷ் மாத்தூரை அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். வேடிக்கை என்ற பெயரில் ஒரு ஆசிரியரே மாணவரின் மனநிலையைப் பாதிக்கும் வகையில் நடந்துகொண்டதும், அதற்கு உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையும் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
