LATEST NEWS
“உணவு கெட்டது இல்ல… அது கடவுளோட பிரசாதம்…!” ஹோட்டல் சாப்பாட்டை பார்த்ததும் தாத்தா செஞ்ச இந்த ஒரு விஷயம்… வைரலாகும் 80 வயது முதியவரின் வீடியோ..!!
சுவை மற்றும் விருப்பம் காரணமாகப் பல நேரங்களில் மனிதர்கள் உணவை மோசம் என்று கூறி ஒதுக்கிவிடும் சூழலில், 80 வயது முதியவர் ஒருவர் கூறிய “உணவு கெட்டது அல்ல, அது கடவுளின் பிரசாதம்” என்ற அறிவுரை இணையத்தில் பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது. ஸ்ரீகாந்த் பாண்டே என்ற நபர், தனது தந்தையின் விருப்பப் பட்டியலில் உள்ள கோவில்களுக்கு அவரை அழைத்துச் செல்லும் பயணத்தில் ஒடிசாவின் புவனேஸ்வரில் இருக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆயுளில் முதல்முறையாக ஹோட்டல் உணவைச் சாப்பிட வந்த தனது 80 வயது தந்தைக்கு உணவு பிடிக்குமா, அவர் சாப்பிடுவாரா என்ற சந்தேகம் ஸ்ரீகாந்திற்கு இருந்த நிலையில், அந்த முதியவரோ உணவைக் குறித்து மிகவும் மேன்மையான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் பாண்டேவின் தந்தைக்குப் பற்கள் இல்லாததால், உணவை மென்று சாப்பிடுவதில் சிரமம் இருக்கும்; அதனால் அவர் வழக்கமாக வெளியே சாப்பிடுவதில்லை. ஆனால், அன்றைய தினம் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவு அவருக்குப் பிடித்துப்போனது. முதல்முறையாக காலை உணவு பஃபேவைக் கண்ட அந்த முதியவர், உணவைச் சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பாகத் தனது தட்டை வணங்கிவிட்டு, பிறகு மிகவும் அன்போடு ஒவ்வொன்றாகச் சுவைத்துச் சாப்பிட்டார்.
https://www.instagram.com/reel/DdAlIQUMTzC/?utm_source=ig_web_button_share_sheet
தாத்தாவின் இந்தச் செயல் சமூக வலைதளப் பயனர்களைப் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. சிலர், “அக்காலத்து மனிதர்கள் இப்படித்தான் தூய்மையான மனதுடன் இருந்தார்கள், இந்த தலைமுறையின் அன்பு இனி மிகவும் ஏங்க வைக்கும்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதைப் பற்றி ஸ்ரீகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாம் பெரிய பெரிய மகிழ்ச்சிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம், ஆனால் உண்மை மகிழ்ச்சி சிறிய விஷயங்களில்தான் ஒளிந்திருக்கிறது என்பதை என் அப்பாவைப் போன்றவர்கள் உணர்த்துகிறார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
